பி.எட். கலந்தாய்வு நிலவரம்
லேடி வெலிங்டன் கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட். கலந்தாய்வில் ஆகஸ்ட் 27ம் தேதி கணிதம் மற்றும் புவியியல் மாணவர்களுககான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி காலை 9 மணியில் இருந்து 1 மணி வரை கணிதப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மதியம் 1 மணியில் இருந்து 5 மணி வரை புவியியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 28ம் தேதியன்று, காலையில் வேதியியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரவியல், ஹோம் சயின்ஸ், வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தேர்வு பட்டியலில் இடம்பெற்றவர்களும், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றவர்களும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.