உள்ளூர் செய்திகள்

தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் தாமதம்

விருதுநகர்: தலைமையாசிரியர்களுக்கு, &'கவுன்சிலிங்&' அறிவிக்காததால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், தவித்து வருகின்றனர். தமிழகத்தில், சமச்சீர் பாடதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாதம் நடத்த வேண்டிய &'கவுன்சிலிங்&', இடைநிலை ஆசிரியர்களுக்கு செப்., 16 முதல் 20ம் தேதி வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 19, 20 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்