பெல் நிறுவன பணிவாய்ப்பு
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.எச். இ.எல்.,) என்ற பெல் நிறுவனம் அரசுத்துறை சார்ந்த பிரம்மாண்டமான நிறுவனமாகும். நவரத்னா பொதுத் துறை நிறுவனமாகிய பி.எச்.இ.எல்., இந்தியப் பொருளாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளான பவர் ஜெனரேஷன், டிரான்ஸ்போர்டேஷன், ரெனிவபிள் எனர்ஜி, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்குத் தேவையான பல முக்கிய பொருட்களைத் தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. நாடெங்கும் இந்த நிறுவனத்திற்கு பல இடங்களில் உற்பத்தி மையங்களும் இதர அலுவலகங்களும் உள்ளன. இந்த நிறுவனத்தின் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள திருமயம் உற்பத்தி மையத்தில் மொத்தம் 590 ஆர்டிஸன்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுகளும் காலி இடங்களும்:பெல் நிறுவனத்தின் ஆர்டிஸன் பிரிவில் 311 பிட்டர்களும், 136 வெல்டர்களும், 22 மெஷினிஸ்டுகளும், 29 எலக்ட்ரீசியன்களும், 84 கிரேன் ஆப்பரேட்டர் கம்ரிக்கர்களும், 3 ஏ.சி., மெக்கானிக்குகளும், 5 இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்குகளும் தேவைப்படுகிறார்கள். தேவைகள் என்னென்ன:01.09.2011 அன்று 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. பிட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நேஷனல் டிரேடு சர்டிபிகேட் மற்றும் நேஷனல் அப்ரன்டிஸ் சர்டிபிகேட்டை பிட்டர் அல்லது ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதர பிரிவினர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறையில் என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., முடித்திருக்க வேண்டும். விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். இத்துடன் மிக நல்ல உடல் தகுதியும் கட்டாயத் தேவையாகும். இதர தகவல்கள்: பெல் நிறுவனத்தின் ஆர்டிஸன் பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.125/ஐ Bharath Heavy Electricals Limited, Trichy என்ற பெயரில், டவுண்லோடு செய்து பெறப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப் மற்றும் பணம் செலுத்திய சலானின் ஒரிஜினல் ஆகியவற்றைப் பின் வரும் முகவரிக்கு 01.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும். முகவரி: Manager (HRM Department,Building 24, Bharat Heavy Electricals LimitedTiruchirappalli - 620014 ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 24.09.2011விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 01.10.2011எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06.11.2011 இணையதள முகவரி: http://careers.bhel.in