என்.டி.பி.சி., நிறுவனத்தில் இன்ஜினியர்கள்
இந்தியாவின் எரிசக்தித் துறையில் மிகவும் புகழ்பெற்ற என்.டி.பி.சி., என்ற நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் எரிசக்தி வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் தற்போது இத்துறையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. வரும் 2017க்குள் 75 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை நிறைவு செய்யும் நோக்கத்தில் இந்த நிறுவனம் முன்னேறி வருகிறது. இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கேட் 2012 (GATE - 2012) மதிப்பெண்கள் கட்டாயத் தேவையாகும். என்னென்ன பிரிவுகள்:என்.டி.பி.சி.,யின் கிராஜூவேட் இன்ஜினியர் பதவிக்கு எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதர தகவல்கள்:இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான வயது, கல்வித் தகுதி, இதர விபரங்கள் அனைத்தையும் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் பார்த்து அறியவும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் குழுவிவாதம் மற்றும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். இவற்றிலும் வெற்றி பெறுபவர்கள் பணியில் அமரலாம். இணையதள முகவரி: http://careers.bhel.in