உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. மறுமதிப்பீட்டிற்கு கோரிக்கை

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முடிவுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தேர்வு முடிவுகளை ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், எழுத்துத் தேர்வில், தேர்வர்கள் எழுதும் விடைத்தாள்களில் தனித்தனி குறியீடுகள் உள்ளன. அவற்றில் எந்த மோசடியும் செய்ய இயலாது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்துதான் மோசடி துவங்கியுள்ளது. எனவே, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில ஆண்டுகளில் நடத்திய அனைத்துத் தேர்வுகளின் விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று பரவலாகவே தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது நடந்த குரூப் 1 தேர்வுகளில் மட்டுமே முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆனால், ஏற்கனவே நடந்த ஒரு சில தேர்வுகளையும் சேர்த்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினால், நன்கு படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அரசுப் பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. எனினும், தமிழக அரசு கவனத்துடன் இப்பிரச்சினையைக் கையாள வேண்டியதும், திறமையாக படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பதவியை வழங்கிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்