மனநோய் மருத்துவராக வேண்டுமா...
நவீன காலத்தில் மக்கள் பலவித பிரச்னைகளை எதிர்கொள்வதால், மனநோய்க்கு ஆளாகின்றனர். இதை நீக்குவதற்கு, சைக்கியாட்ரி முறையில் சிகிச்சை அளிப்பது அவசியம். மருத்துவ துறையில், சைக்கியாட்ரி (மனநோய் மருத்துவம்) முக்கிய பிரிவாக விளங்குகிறது. மனநோய் குறித்த சைக்கியாட்ரி கோர்ஸை படிப்பதன் மூலம், மனநோய் சம்பந்தப்பட்ட உடல்நல கேடுகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். சைக்கியாட்ரி படிப்பானது, மனித மூளையில் உள்ள சிக்கலான வழிகளை, மிக நுட்பமான முறையில் ஆராய்ந்து சிகிச்கை அளிப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு நபருக்கும், தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சைக்கியாட்ரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சைக்யாட்ரிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இப்படிப்பை வழங்கும் நிறுவனங்கள்:* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்கியாட்ரி, ராஞ்சி* இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் அன்ட் அலைடு சயின்சஸ், புது டில்லி* கர்நாடகா யுனிவர்சிட்டி, தார்வாட்* லேடி ஹார்டிஞ்ச் மெடிக்கல் காலேஜ்,புதுடில்லி* மவுலானா ஆசாத் மெடிக்கல் காலேஜ், புதுடில்லி* நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரெய்னிங், புது டில்லி* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோ சயின்சஸ், பெங்களூரு