உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடம்

ஜெர்மன் மொழி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கதே இன்ஸ்டிட்யூட் பேராசிரியர் ஜெரோம் ராஜன் இத்தகவலை தெரிவித்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்றுத் தருவதற்கு பள்ளிக் கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். இப்பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தால் அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வகுப்பு வரை பாடத்திட்டத்தில் ஜெர்மன் மொழிப்பாடமும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்புடம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பள்ளிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடைபெறும் இளைஞர் முகாமில் பங்கேற்கும் வகையில் ஜெர்மன் மொழி கற்பிக்கும் திட்டங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது என்று கதே இன்ஸ்டிட்யூட் இயக்குநர் காப்ரியேல் லேன்வர் தெரிவித்தார். ஜெர்மன் மொழியைப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து பல்வேறு பள்ளி போர்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பதற்கேற்ற வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று ஒருங்கிணைப்பாளர் புனித் கவுர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்