தொழிற்பிரிவு கவுன்சிலிங் தேதிகள்...
சென்னை: தொழிற்பிரிவில் படித்த மாணவர்களுக்கென நடத்தப்படும் தொழிற்பிரிவு கவுன்சிலிங், ஜுலை 9ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில், காலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன்பிறகு, கட்-ஆப் மதிப்பெண் 197.00 தொடங்கி, 190.00 வரை நடைபெறும். அதன்பிறகு, ஜுலை 18ம் தேதி வரை இடைவிடாமல், தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும். கடைசி நாளில், கட்-ஆப் மதிப்பெண் 124.50 தொடங்கி, 77.50 வரை நடைபெற்று நிறைவடைகிறது. இந்த கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள ராமானுஜன் கம்யூட்டிங் மையத்தில் நடைபெறுகிறது. அனைத்து விரிவான விபரங்களுக்கும் http://online.annauniv.edu/tnea/pdf/vocsch020714.pdf என்ற வலைதளம் செல்க.