கடல்துறை சார்பில் கருத்தரங்கம்
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் கடல்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கடற்கரை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் கடலோர காவல்படை துணை கண்காணிப்பாளர் ஞான சிவக்குமார் பேசுகையில், "வீட்டுக்கழிவுகள் மற்றும் தெருவோர கழிவுநீரினை கடலில் கலக்காமல் செய்தால் கடல் நீர் மாசு அடையாது" என்றார்.