உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி

மதுரை:தமிழ்நாடு ஐசிடி அகாடமி சார்பில், மதுரையில் &'ஐசிடிஏசிடி&' மனிதவள உச்சி மாநாடு நடந்தது.அகாடமி சி.இ.ஓ., சிவக்குமார் வரவேற்றார். வேலம்மாள் கல்வி குழுமத்தலைவர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். குளோபல் டேலன்ட் நிறுவன துணைத்தலைவர் கணேசன் பேசியது: அறிவைப் பெறுவது என்பது வேறு; அதை பயன்படுத்துவது என்பது வேறு. கல்லுாரிகள் மதிப்பெண்களையும், சான்றிதழ்களையும் உருவாக்குகின்றன. தகவல் தொழில்நுட்பம் என்பது வெறும் கோடிங் மட்டுமல்ல தொழில்நுட்பம் எல்லா இடத்திலும் வளர்ந்துள்ளது. திறமையாக, வாழ்வியலை, பொது அறிவு கலந்து பாடம் நடத்தும் ஆசிரியரை எல்லா மாணவர்களுமே விரும்புவர். நிறுவனங்கள் மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கின்றன எனஅறிந்து அதற்கேற்ப மாணவர்களை வழிநடத்தவேண்டும். அதன் மூலமே மாணவர்கள் நிறுவனத்திற்கேற்ப தகுதி பெற்றவர்களாக மாறுவர், என்றார். வி.எம்.வேர் ஐ.டி., நிறுவனம், இ.எம்.சி., நிறுவனம் மற்றும் ஆட்டோ டெஸ்க் நிறுவனங்களுடன் தலா 1௦ கல்லுாரிகள் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்