உள்ளூர் செய்திகள்

கடிதம் எழுதிய மாணவர்கள்

திருப்பூர்: உலக தபால் கூட்டமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதும் போட்டி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது; கோட்ட தபால் அலுவலக கண்காணிப்பாளர் சக்திவேல் முருகன் துவக்கி வைத்தார். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், 199 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 45 வயதில் நீ என்கிற தலைப்பில், கடிதம் எழுதினர். மாணவர்கள், 45வது வயதில் எப்படி இருப்போம் என, கற்பனை செய்து, கடிதம் எழுதினர். இப்போட்டியில், தேசிய அளவில் முதலிடம் பெறும் கடிதத்துக்கு, 5,000; இரண்டாம் பரிசாக, 3,000; மூன்றாம் பரிசாக, 2,000; ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்