மதுரை மாணவர்களுக்கு விருது
மதுரை: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் காந்தியன் யங் டெக்னாலஜிக்கல் இன்னோஷன் விருது பெற்றனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பில் 276 பல்கலைகளைச் சேர்ந்த 50 தொழில்நுட்பத்தின் கீழ் 2,363 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டன. இதில் சிறந்த 43 திட்டங்களில் ஒன்றாக வேலம்மாள் மாணவர்களின் திட்டம் தேர்வு செய்யப்பட்டது. உதவி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் மெக்கானிக்கல் பிரிவு மூன்றாமாண்டு மாணவர்கள் கார்னிலஸ் துரை, லட்சுமணராஜா, ஸ்ரீராம் ஆகியோர்ப்ளவர் நாட்டிங் டிவைஸ் டிசைன் மற்றும் மேம்பாட்டு திட்டத்தை உருவாக்கினர். இதற்கான விருதை நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் எப்.ஆர்.எஸ்., தலைவர் மசேல்கர் மாணவர்களுக்கு விருது வழங்கினார். வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், துணைத்தலைவர் கணேஷ் நடராஜன், முதல்வர் சுரேஷ்குமார், துறைத்தலைவர் மணிகண்டன் பாராட்டினர்.