உள்ளூர் செய்திகள்

சிறார்களுக்கு விளையாட்டு விழிப்புணர்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பள்ளி குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வம் ஏற்படுத்த, விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.கே.ஜி., வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, உடல் நல விளையாட்டுகளில் ஆர்வம், விழிப்புணர்வு ஏற்படுத்த, மாமல்லபுரம் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இச்சங்கம் சார்பில், நேற்று, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இங்கு நடந்தது. கடற்கரை கோவில் அருகில் துவங்கிய பேரணியை, ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா துவக்கி வைக்க, சிற்ப கலைஞர் பாஸ்கரன், விளையாட்டு ஜோதியை துவக்கி வைத்தார். சங்க பொறுப்பாளர்கள் டேவிட், பாலன் உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணியில், மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்