என்.ஐ.டி., மாணவர்கள் உண்ணாவிரதம்!
காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி., கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத் தில் மாணவர்கள் ஈடுபட்டனர். காரைக்கால், அண்ணா கல்லூரியில் இயங்கி வரும் என்.ஐ.டி., கல்லூரியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர் கள் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் சத்யேந்திர சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேற்று என்.ஐ.டி., கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.