உள்ளூர் செய்திகள்

கல்லூரியில் வளாகத் தேர்வு

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வளாகத்தேர்வில் 316 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். அசோக் லேலாண்ட், டி.வி.எஸ்., பிரேக்ஸ் இந்தியா, சென்னை அவலான் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மாணவர்களை தேர்வுசெய்தனர். முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளர் சர்மிளா மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பல்வேறு பாலிடெக்னிக் கல்லுாரிகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் கமால் அப்துல் நாசர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்