இணைய வழி கண்காட்சி
மதுரை: மதுரையில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அகஸ்தியா மற்றும் ஹனிவெல் நிறுவனம் சார்பில் இணையவழி அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடந்தன.இதில் 6, 10ம் வகுப்பு மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புக்களை இணையவழியில் காட்சிப்படுத்தினர். 50 சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளை ஆசிரியர்கள் தனசேகரன், சோலைக்கண்ணன் ஒருங்கிணைத்தனர். மாநில அளவில் ஆக.,15ல் நடக்கும் போட்டியில் முதல் மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படவுள்ளனர்.