உள்ளூர் செய்திகள்

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு

பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகத்தில், முறைகேடு நடக்கிறது. பல்கலைக்கழக பணத்தை கொள்ளையடிக்க, முயற்சி நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சின்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட, சில முடிவுகளை ரத்து செய்யும்படி, அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு பல்கலைக்கழகத்தின், சில உறுப்பினர்கள், கவர்னர் வஜுபாய் வாலா மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கு, எழுதிய கடிதத்தில் கூறியதாவது:பல்கலைக்கழகத்தின் பணத்தை, கொள்ளையடிக்கும் நோக்கில், சில திட்டங்களுக்கு, சின்டிகேட் உறுப்பினர்கள் பலர் ஒப்புதல் அளித்துள்ளனர். பெங்களூரு பல்கலைக்கழகத்தின், 11வது சின்டிகேட் கூட்டத்தில், அபிவிருத்தி பெயரில், கட்டடம் கட்ட 155 கோடி ரூபாயை, அரசின் வேறொரு துறைக்கு இடமாற்றம் செய்ய, உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது கட்டடம் கட்டுவதற்கான, செலவை விட நான்கு மடங்கு அதிகமாகும்.ஆன்லைன் தேர்வு பணிகளுக்கு, பல்கலைக்கழகம் &'இ - கவர்னர்&' , &'எக்சாமினேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்&' என்ற, இரண்டு தொழில்நுட்பங்களை வாங்கியுள்ளது. இதில் 40 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கமிட்டி அமைத்து, விசாரணையும் நடந்தது.மதிப்பெண் சான்றிதழ்களை, டிஜிட்டல் வடிவில் கொடுக்க, யு.ஜி.சி., எனும் பல்கலைக்கழக நிதி வினியோக மசோதா செயல்படுத்திய, &'நேஷனல் அகாடமிக் டெபாசிட்ரி&' இருக்கும் போது, மாநில அரசு செயலபடுத்திய &'இ - டாக்குமென்ட் ஜெனரேஷன் சிஸ்டம்&' தொழில்நுட்பத்தை பயன்படுத்த, பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதிலும் கூட பல்கலைக்கழகத்தின் பணம், தேவையின்றி வீணாக்கப்படுகிறது. சின்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட, இத்தகைய முடிவுகளுக்கு, உறுப்பினர்கள் பலர், ஒப்புதல் அளித்தது துரதுஷ்டவசம். இந்த முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்