தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ்?
கோவை: கடந்த கல்வியாண்டுகளில் பொதுத்தேர்வு எழுதி உரிய மதிப்பெண் பெற்று, நடப்பாண்டில் முதலாமாண்டு சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் சேர்க்கை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்ற குழப்பம் பல்கலை, கல்லுாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே முக்கியம் என்பதால், சேர்க்கை செயல்பாடுகளை துவக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை, கல்விநிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ளன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் முதலாமாண்டு மருத்துவம், பொறியியல், வேளாண்மை படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் முடித்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த கல்வியாண்டுகளில் முடித்தவர்களும் போட்டிபோடுவது வழக்கம். கடந்த கல்வியாண்டில் முடித்தவர்கள் முறையாக பொதுத்தேர்வை எதிர்கொண்டு, மதிப்பெண் பெற்றவர்கள் என்பதால், மாணவர் சேர்க்கை மதிப்பீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர்கள் கூறுகையில்,&' பல்கலைக்கு பல்வேறு அழைப்புகள் வருகின்றன. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், எங்களது மதிப்பெண்களை எவ்வாறு, அவர்களது மதிப்பெண்களுடன் ஒப்பிட முடியும். பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்வதால் கட்டாயம் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வரும். &'வெயிட்டேஜ்&' வழங்கப்படுமா என பல சந்தேகங்கள் கேட்கப்படுகின்றன. மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும்போது. கடந்த கல்வியாண்டுகளில் பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களை மதிப்பிடுவது குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கவேண்டியது அவசியம். இந்நிலையே, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் பல்கலை, கல்விநிறுவனங்களிலும் உள்ளன&' என்றனர்.