பொருளாதார நிச்சயமற்ற நிலை
கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதமாக இருந்த இந்தியாவின் வேலை வாய்ப்பு விகிதம் மே மாதத்தில் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது; எனினும், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தொழில்முறை பணியாளர்கள் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு ஆளாக நேரிட்டுள்ளனர், என்று லிங்க்ட்இன் தெரிவித்துள்ளன.மார்ச் மாதத்தில் 50 சதவீதமாக இருந்த இந்தியாவின் வேலைவாய்ப்பு பெறுவோர் விகிதம் ஏப்ரல் மாதத்தில் 10 சதவீதமாகக் குறைந்தததும் குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு படிப்படியாக நீக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் தொடங்கியதால், வேலைவாய்ப்பு விகிதம் மே மாதத்தில் புத்துயிர் பெற்றது. இருப்பினும், உழைக்கும் பெண்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட 4 மடங்கு குறைவான நம்பிக்கையுடன் உள்ளனர். அதே நேரத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலை தேடுவதற்கான சராசரி காலம் 2 மாதங்களில் இருந்து 3 மாதங்களாக அதிகரித்துள்ளது. நிதி, கார்ப்பரேட் சேவைகள், உற்பத்தி, ஹெல்த்கேர் மற்றும் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்தும், மறுபுறம் நுகர்வோர் பொருட்கள், மீடியா அண்ட் கம்யூனிகேஷன்ஸ், ஆட்டோமோடிவ், மார்க்கெட்டிங் மற்றும் அட்வர்டைசிங் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு வீழ்ச்சி அடைந்தும் உள்ளன என்றும் லிங்க்ட்இன் தெரிவித்துள்ளது.