உள்ளூர் செய்திகள்

கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள்?

இவை அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழங்களாக செயல்படவுள்ளன. முதலில் இது போன்ற பல்கலைக்கழகம் ஒன்று மட்டுமே நிறுவப்படும். அரசுதனியார் ஒத்துழைப்போடு நிறுவப்படவுள்ள இந்த பல்கலைக்கழகம் வெற்றிகரமாக செயல்பட்டால் உடனே இது போன்ற பல பல்கலைக்கழகங்கள் நிறுவப்படவுள்ளன.   யார் அதிக ஏலத் தொகையைக் கேட்கின்றனரோ அவருக்கு அரசின் மானியமும் தரப்படும். செயல் சுதந்திரம் மற்றும் பாடத்திட்ட சுதந்திரம் ஆகியவற்றோடு இந்தப் பல்கலைக்கழகம் செயல்படவுள்ளது. பிற்படுத்தப்பட்டபிரிவினரின் மேம்பாட்டிற்காக மானியம் தரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. திட்டக்குழுவின் கல்வி இணை இயக்குனர் சகீலா சாம்சூ இது பற்றிக் கூறுகையில் அரசு மட்டுமே மொத்த நிதியையும் தரும் என தனியார்நிறுவனங்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று கூறினார். கிளினிகல் ரிசர்ச் பிரிவில் ஈடுபட விரும்பிய தொழில் நிபுணர்கள் சிலரை ஒன்றிணைத்து சமீபத்தில் குஜராத் மாநில அரசு கிளினிகல் ரிசர்ச் பல்கலைக்கழகம் ஒன்றை பயோடெக்னாலஜி துறையில் துவங்கியது இதே மாதிரியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.   சமீபத்திய திட்டக்குழு மதிப்பீட்டின் படி இந்தியாவில் கல்வித் துறையில் சுமார் 2 லட்சத்து 2 கோடி ரூபாய் என கூறியுள்ளனர். இதை மத்திய அரசு மட்டுமோ மாநில அரசுகள் இணைந்தோ திரட்ட முடியாது. எனவே தான் தனியார்அரசு ஒத்துழைப்பு என்பது கல்வித் துறைக்குஅவசியம் தேவைப்படுகிறது என்பதே கல்வியாளர்களின் செய்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்