உள்ளூர் செய்திகள்

அமெரிக்க பேராசிரியைக்கு வரவேற்பு

அன்னுார்: அமெரிக்க பேராசிரியைக்கு, கோவில்பாளையம் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பன்னாட்டு மாணவர்களின் கலை, கலாச்சார அமைப்பின் கலிபோர்னியாவை சேர்ந்த மார்கெட் பெக்கி ஆல்ஸ்ட்ரம் போலார்டு, கோவில்பாளையம் தமிழ்ச்சங்க அரங்கத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். உதவி பேராசிரியர் கணேசன், அமெரிக்க பேராசிரியையை அறிமுகம் செய்து வைத்தார். புலவர் அன்வர் பாட்சா, கவையன்புத்துார் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார். பாரம்பரிய கலாச்சாரம் எனும் தலைப்பில் பேச்சாளர் கண்ணன், தமிழர் வாழ்க்கை முறை எனும் தலைப்பில் தமிழாசிரியர் முனியாண்டி பேசினர். அமெரிக்க பேராசிரியை, தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்து வணக்கம் தெரிவித்தார்.பேராசிரியை பேசியதாவது:ஒவ்வொரு மனிதருக்குள்ளும், ஒரு உலகம் உள்ளது. மாநிலம், நாடு, என பண்பாடுகள், இடத்துக்கு இடம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டின் கலை பண்பாட்டு கலாசார அமைப்பை ஒருங்கிணைத்து, மாணவ சமுதாயத்துக்கு ஒரு வலுவான கூட்டமைப்பை தரவே, பல்வேறு நாடுகளில் பயணம் செய்து வருகிறேன். நடன ஆசிரியராக பணிபுரிந்து, பொறுமை, சிந்தனை, உடல் ஆரோக்கியத்தை வளர்த்துள்ளேன். இயல், இசை, நாடகம் வாயிலாக தன்னம்பிக்கையை வளர்க்க முடியும். பல கல்லுாரிகளுக்கு சென்று மாணவ, மாணவியரோடு கலந்துரையாட உள்ளேன். ஒரு நாட்டின் தொன்மையை மற்ற நாடுகளும் அறிந்து உயர்வு பெறவே, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.பேராசிரியைக்கு நினைவு பரிசு, கேடயம், புத்தகங்கள் வழங்கப்பட்டன. தமிழ் சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்