உள்ளூர் செய்திகள்

முதல்வர் கோப்பை ஹாக்கிபோட்டி

உடுமலை: சென்னையில் வரும் 3ம் தேதி நடக்கும் மாநில முதல்வர் கோப்பை ஹாக்கிப்போட்டியில் பெதப்பம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.மாநில முதல்வர் கோப்பைக்கான சிலம்பம், கபடி, வாலிபால் போட்டி சென்னையில் நேற்று துவங்கியது. இதில், பங்கேற்க, திருப்பூர் மாவட்ட வீரர், வீரங்கனையர் 66 பேர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக, நேற்றுமுன்தினம் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, திருப்பூர் காலேஜ் ரோடு, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்று, சீருடை, ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை, மாநில போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வழங்கினார். திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கான ஹாக்கி அணியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திவாகர், சபரீஷ், தருண்குமார், குணசேகரன், தமிழ்மணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வரும் 3ம் தேதி நடக்கும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களை பள்ளித் தலைமையாசிரியர் கார்த்தியேன், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்