உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த ஆசிரியர் பட்டப்படிப்பு

படிப்புகள்: பி.ஏ.,-பி.எட்., / பி.எஸ்சி.,-பி.எட்., படிப்பு காலம்: இது ஒரு இரட்டைப் பட்டப்படிப்பு. அதாவது, பி.ஏ., / பி.எஸ்சி., பட்டத்துடன் பி.எட்., பட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. இவற்றை தனித்தனியாக படிக்கும்போது, 5 ஆண்டுகால படிப்பாகவும், அதுவே ஒருங்கிணைந்த திட்டத்தை தேர்வு செய்யும்போது 4 ஆண்டுகால படிப்பாகவும் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள்:ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஆர்.ஐ.இ., உட்பட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதற்கான சேர்க்கையை வழங்குகின்றன. இந்த ஒருங்கிணைந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள், மேற்படிப்புகளிலும் சேரலாம். கல்வித் தகுதி:பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேசிய பொது நுழைவுத்தேர்வு - என்.சி.இ.டி., வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.நுழைவுத் தேர்வு:கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் என்.சி.இ.டி., தேர்வு நாடு முழுவதிலும் 178 நகரங்களில் நடத்தப்படுகிறது. முற்றிலும் மொழித்தாள்கள், பிரதான பாடங்கள், பொது அறிவு மற்றும் டீச்சிங் ஆப்டிடியூட் ஆகிய நான்கு பிரிவுகளில் ‘மல்டிபிள் சாய்ஸ்’ வடிவில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுத்தாள்: அஸ்சாமீஸ், பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, ஒடியா, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் கேள்வித்தாள் இடம்பெற்றுள்ளன.விண்ணப்பிக்கும் முறை: https://ncet.samarth.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 19விபரங்களுக்கு: www.nta.ac.in மற்றும் https://ncet.samarth.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்