உள்ளூர் செய்திகள்

ஓசூரில் புத்தக திருவிழா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜூலை 14 முதல் ஜூலை 25 வரை, 12 வது புத்தக திருவிழா நடக்கிறது. இதில், 110 அரங்குகள் அமைக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனை மற்றும் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பொதுமக்கள் இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, ஓசூர் அருகே கோனேரிப்பள்ளியில் இயங்கும் பி.எம்.சி., டெக் கல்லுாரியில், ஓசூர் வாசிக்கிறது என்ற தலைப்பில், 1,000 மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து, தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார், இயக்குனர் சுதாகரன், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், கவுரவ தலைவர் வணங்காமுடி, துணைத்தலைவர் நீலகண்டன் உட்பட பலர் புத்தகங்களை வாசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்