சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
இன்று உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம். கடற்பரப்பு, அடர்ந்த காடுகள், மரங்கள், பாலை, பனிப்பிரதேசங்கள், மலைகள் ஆகியவற்றைக் காக்கவேண்டியது நமது கடமை. ஆண்டுதோறும் ஜூலை 28 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மருத்துவ ஊழியர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் பலர் சுற்றுச்சூழல் மாசுவைத் தடுக்க விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்வர். அதிகரிக்கும் தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை காரணமாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது.நீர்நிலைகளில் ரசாயனக் கழிவுகள், கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன. நாம் பயன்படுத்தி தூக்கியெறியும் மின்னணுக் குப்பைகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடலில் விபத்து காரணமாக கொட்டப்படும் எண்ணெய் கடலை மாசுபடுத்துகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பல பாதிக்கப்படுகின்றன. உலகம் மனிதர்கள் வாழ்வதற்கான இடம் மட்டுமல்ல, பிற உயிரினங்களும் உள்ளன. முடிந்தவரை இயற்கையை தொல்லை செய்யாமல் மனிதன் இந்த உலகில் வாழவே நமது முன்னோர் நமக்குப் பாடம் கற்பித்துச் சென்றுள்ளனர்.மனிதர்களின் நேரடி மற்றும் மறைமுக அலட்சியம் காரணமாகவே சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனைத் தடுக்க இந்நாளில் முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இ சிகரெட் புகை சுற்றுச்சூழலை மாசு படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனைத் தடுக்க இ சிகரெட் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.