புத்தக கண்காட்சியில் கவியரங்கம்
கோவை: கோவை கொடிசியா வணிக வளாகத்தில் 7 வது புத்தக கண்காட்சி நடந்து வருகிறதுஇதை முன்னிட்டு பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நேற்று புத்தக நேசம் புத்துலக சுவாசம் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடந்தது. 18 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர். தலைமை வகித்த கவிஞர் கோவை கிருஷ்ணா பேசுகையில், கோவையில் பல்வேறு இலக்கிய அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் செயல்படும் முக்கிய கவிஞர்கள் இந்த கவியரங்கத்தில் பங்கேற்றுள்ளனர். மக்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் சூழலில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கவியரங்கம் நடத்தப்படுகிறது என்றார்.