உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் விதை திருவிழா

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பாரம்பரிய விதை திருவிழா நடந்தது.விழாவில் மரபு வகையை சேர்ந்த நெல் விதைகள், நாட்டு ரக செடி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை உணவு வகைகள், மூலிகை மருந்துகள், சித்த மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பாரம்பரியம் மற்றும் இயற்கை சார்ந்த வகையில் தயாரிக்கப்பட்ட விதைகள், உணவு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. விழாவிற்கு, முன்னோடி பாரம்பரிய விவசாயி பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செந்தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் அமைப்பாளர் ரமேஷ் கருப்பையா, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் அமைப்பாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், துணை பேராசிரியர் பாரதிக்குமார் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா ஆகியோர் மரபுவழி வேளாண்மைக்கு அரசின் வழங்கும் திட்டங்கள், சலுகைகள் குறித்து விளக்கி பேசினர். எழுத்தாளர் கண்மணி குணசேகரன், நஞ்சில்லா உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, ஈரநிலம் தமிழரசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.இயற்கை விவசாயி கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்