பாடமாகும் பருவநிலை மாற்றம்
சென்னை: இளநிலை பட்டப்படிப்பில் பருவநிலை மாற்றம் குறித்த பாடம் அடுத்த ஆண்டு முதல் சேர்க்கப்படும் என்று சென்னப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நடந்த பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு என்ற தலைப்பிலான தேசிய அளிவிலான கருத்தரங்கில் துணைவேந்தர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். பருவநிலை மாற்றம் பற்றி மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவது அவசியம். இதற்காக சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த பாடம் சேர்க்கப்படும். கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் இதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கருத்தரங்கில் 10 சிறப்பு சொற்பொழிவாளர்கள், மூன்று சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 44 பேரது ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டன.