உள்ளூர் செய்திகள்

இலக்கிய திறனாய்வு தேர்வு

திருப்பூர்: பிளஸ் 1 மாணவர், தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ள, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்படுகிறது. செப்., மாதம் அறிவிப்பு வெளியானவுடன், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, தேர்வை எதிர்கொள்ள, 7,212 பேர் விண்ணப்பித்தனர்.திருப்பூர் ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தின், 24 தேர்வு மையங்களில் மாணவ, மாணவியருக்கான தேர்வு நடந்தது. விண்ணப்பித்தவர்களில், 6,636 பேர் பங்கேற்றனர்; 576 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவருக்கு மாதம், 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்