காரைக்குடிக்கு வந்த கவர்னர்
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.க்கு கவர்னர் ஆர்.என். ரவி வருகையை யொட்டி 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் இன்று நடைபெறும் ஜி 20 மாநாடு குறித்த தேசிய கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று மாலை காரைக்குடி வந்தடைந்தார். கவர்னர் வருகையையொட்டி, முன்னதாக கலெக்டர் ஆஷா அஜித் எஸ்.பி., அரவிந்த் உதவி எஸ்.பி., ஸ்டாலின் உட்பட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.எஸ்.பி., தலைமையில் 2 ஏ.டி.எஸ்.பி., ஒரு உதவி எஸ்.பி., 6 டி.எஸ்.பி., உட்பட காரைக்குடி அழகப்பா பல்கலை., கல்லுாரி சாலை உட்பட நகர் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.