பொறியாளர்களுக்கு விருது வழங்கல்
புதுச்சேரி: இந்திய குடிமைப்பொருள் கலந்தாய்வு கூட்டமைப்பு புதுச்சேரி மையம் பொறியாளர்கள் சார்பில், பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா, பொறியாளர்களுக்கு விருது வழங்கும் விழா, பட்டானுார் சாந்தோ லான்ஸில் நடந்தது.விழாவிற்கு, இந்திய குடிமைப் பொருள் பொறியாளர்கள் கலந்தாய்வு கூட்டமைப்பின் புதுச்சேரி மையத் தலைவர் பொறியாளர் முருகன் தலைமை தாங்கினார். தெய்வநாயகம் வரவேற்றார்.புதுச்சேரி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனு திருஞானம் நோக்கவுரை ஆற்றினார். முனைவர் தெய்வநாயகம் கட்டடக் கலைக்கு மாமன்னர் ராஜராஜ சோழன் பங்கு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.பொறியாளர்கள் விஜயநேரு, தாயுமாணவன் வாழ்த்தி பேசினர். சிறப்பு அழைப்பாளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ராசராச சோழன் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதியை தமிழர் பொறியாளர் நாளாக அறிவிக்கப்படும்&' என்றார். தலைமை பொறியாளர்கள் ரகுநாதன், சிவவிஜயன், சிவராமன், சித்ரா, உமாவதி, புனிதா, ஈஸ்வரி ஆகியோருக்கு பொறியாளர் -2023 விருது வழங்கி கவுரவித்தார்.சிவக்குமார் நன்றி கூறினார்.