உள்ளூர் செய்திகள்

நுால்கள் சி.இ.ஓ.,விடம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை புத்தகத்திருவிழாவில் மாவட்ட மைய நுாலகத்திற்கு பதிப்பாளர்கள், வாசகர்கள் இலவசமாக நுால்கள் வழங்கினர். அதில் சிலவற்றை நுாலக ஊழியர்கள் எடைக்கு போட்டதாக தகவல் வெளியானது.இதுதொடர்பாக மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது: நன்கொடையாக பெறப்பட்ட நுால்கள் எடைக்கு போடப்படவில்லை. புத்தகத் திருவிழாவில் நன்கொடையாக பெறப்பட்ட 271 நுால்கள் கலெக்டர் சங்கீதா அறிவுறுத்தல்படி முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) கார்த்திகாவிடம் அக்.,26ல் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்