சென்னையில் புகைப்பட கண்காட்சி
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பழமையான போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில், கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சி துவங்கியுள்ளது. சினிமா ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கண்காட்சியை திறந்து வைத்தார்.அமைப்பின் தலைவர் ராமசாமி, செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருந்தினருக்கு கண்காட்சியை சுற்றிக்காண்பித்தனர். இதில், 90 உறுப்பினர்கள் எடுத்த 253 க்கும் மேற்பட்ட படங்கள் லேண்ட்ஸ்கேப், வைல்டு லைப், மோனோகிராம், போர்ட்ரய்ட் என்ற தலைப்பில், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.