படிப்பிடைப் பயிற்சி நிறைவு
மதுரை: மதுரை மீனாட்சி அரசு கல்லுாரியின் வரலாற்றுத் துறை முதுகலை முதலாமாண்டு மாணவியருக்கான 30 மணி நேர விடுமுறை கால படிப்பிடைப் பயிற்சியின் நிறைவு விழா காந்தி மியூசியத்தில் நடந்தது.செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்து சான்றிதழ் வழங்கினார். கல்வி அலுவலர் நடராஜன், வரலாற்றுத் துறை இணை பேராசிரியை விமலா பேசினர். மாணவி சத்யா நன்றி கூறினார். ஏற்பாடுகளை காந்திய கல்வி ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ், வரலாற்றுத் துறைத் தலைவர் சத்யபாமா செய்திருந்தனர்.