தலைமை ஆசிரியர் கலந்தாய்வு
ஈரோடு: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, 32 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். சி.இ.ஓ., சம்பத்து முன்னிலை வகித்தார்.இதேபோல் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதற்கு, 329 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 6 பேர் இடமாறுதல் பெற்றனர். அதற்கான உத்தரவு ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.