உள்ளூர் செய்திகள்

ஆளுமையை மேம்படுத்தும் கல்வி!

கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான வழிமுறை மட்டுமல்ல; ஒருவரின் முழு ஆளுமை வளர்ச்சியிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார்.இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் வாயிலாகவே, நாடு மற்றும் சமுதாயத்தின் அனைத்து துறை வளர்ச்சியும் சாத்தியமாகிறது. ஆகையால், தரமான கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் வழங்குவதே அத்தகைய இளைஞர்களின் வளர்ச்சிக்கு அடித்தளம். ஐந்தாண்டுகளில் நான்கு லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பபடும் என்றும், இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடங்கள் மற்றும் படிப்புகளை தேர்வு செய்யலாம். இளைஞர்களின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக கல்வித்துறையில் புதிய பரிமாணங்களை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்