உள்ளூர் செய்திகள்

சிவில் சர்வீஸ் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளை செப்., 14ம் தேதி நடத்துகிறது.இத்தேர்வானது 38 மாவட்டங்களில் 2,763 இடங்களில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துவது குறித்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் சென்னை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். வருவாய், காவல்துறை, தீயணைப்பு, மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், துணை கலெக்டர்கள்/தாசில்தார்களை நியமித்தல், தேர்வுக் கூடங்களில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இதர விதிமுறைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காணொலி காட்சியில் விவாதிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்