மாணவருக்கு பாராட்டு
சோழவந்தான்: சோழவந்தான் கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி மாணவர் தர்ஷன், ஐ.ஐ.டி.,மெட்ராஸ் ஆராய்ச்சி மையம் நடத்திய தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடநெறியில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நவீன பாடநெறியில் தரவுகளை பகுப்பாய்வு செய்வது நிரலாக்க நுணுக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளை கற்றுக் கொள்வது போன்ற ஆழமான பாடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.இவை அனைத்தையும் திறம்பட முடித்து தர்ஷன் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை புரிந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.