ஊரக மேம்பாட்டு படிப்பு
ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலெப்மெண்ட் அண்டு பஞ்சாய்த்து ராஜ் கல்வி நிறுவனம் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படிப்பிற்கான பட்டத்தை வழங்குகிறது.படிப்பு: பிஎச்.டி.,-ரூரல் டெவலெப்மெண்ட்தகுதிகள்: எகனாமிக்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ரூரல் ஹெல்த், பொலிட்டிக்கல் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், ஜென்டர் ஸ்டடீஸ், பாபுலேஷன் ஸ்டடீஸ், ஜி.ஐ.எஸ்., சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை படிப்புடன் நெட் / ஜே.ஆர்.எப்., / கேட் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.மொத்த இடங்கள்: இரண்டு பகுதிநேர இடங்கள் உட்பட மொத்தம் 15 இடங்கள்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 19விபரங்களுக்கு: https://nirdpr.org.in/