உள்ளூர் செய்திகள்

தமிழ் வாசிப்பை ஊக்கப்படுத்துங்கள்!

பள்ளி முதல்வர்களுக்காக 'தினமலர் - பட்டம்' சார்பில் எழுக கல்வி கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது.அதில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஆங்கிலம் அவசியம். அவற்றை தமிழில் தர முடியுமா என்றால் முடியும். அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை என்பது நிஜம். ஆங்கிலத்தில் தொழில் முறை கல்வியை போதிப்பதில் தவறில்லை.ஆனால், அதை, தாய்மொழியில் விளக்கும் போது, அது மாணவர்களின் உணர்வுடன் கலந்து நீடிக்கும்; அதை, நான் என் மருத்துவ படிப்பின் போதும், பணியின் போதும் உணர்ந்தேன்.மருத்துவத்தில் உள்ள லத்தீன், கிரேக்க வார்த்தைகளை, தமிழ் வாயிலாகவே புரிந்து கொண்டேன். அதனால், பள்ளிப் பருவத்திலேயே, தமிழில் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்