பாடத்திட்டத்தில் புதுமை வேண்டும்
காலத்திற்கேற்ப வாழ்க்கை முறை மாறினாலும், பள்ளிக்கல்வி முறையில், அதே ஜியாமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில், நோட் புக், தேர்வு எழுதும் முறை தான் உள்ளது; எதுவும் மாறவில்லை.மாணவர்களை பாடத்தை கவனிக்க வைப்பது என்பது பெரும் சவால். செயல்முறை பயிற்சி, சமூகப் படிப்பு என அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும். - உமா மகேஸ்வரி, டீன், அக் ஷயா வித்யாலயா.