உள்ளூர் செய்திகள்

கணித படிப்புகளுக்கு சி.எம்.ஐ.,

கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய துறை சார்ந்த படிப்புகள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சி.எம்.ஐ., எனும் 'சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்', மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்:பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் - 4 ஆண்டுகள்பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல் - 4 ஆண்டுகள்பி.எஸ்., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 4 ஆண்டுகள்எம்.எஸ்சி., - கணிதம் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., - கணினி அறிவியல் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., - தரவு அறிவியல் - 2 ஆண்டுகள்பிஎச்.டி., - கணிதம்பிஎச்.டி., - கணினி அறிவியல்பிஎச்.டி., - இயற்பியல்தகுதிகள்:பி.எஸ்., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்புகளில் சேர துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும்.மாணவர் சேர்க்கை முறை:கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் பி.எஸ்., எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் முறை: https://apply2026.cmi.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.நுழைவுத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 4, 2026நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: மே 2, 2026விபரங்களுக்கு: www.cmi.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்