மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி நேற்று நடந்தது.சின்ன காஞ்சிபுரம் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணியை காஞ்சிபுரம் மாநகராட்சி 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் துவக்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லல்லி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, கல்வியாளர் உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் படிப்பின் அவசியம் குறித்த பதாகையை ஏந்திச் சென்றனர்.யாகசாலை மண்டபம் தெருவில் துவங்கிய பேரணி, மலையாள தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது.