நுால் வெளியீட்டு விழா
புதுச்சேரி: கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சியாமளா எழுதிய 'ஆவுடை அக்காள்' நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.விழாவிற்கு, மூத்த பேராசிரியர் பஞ்சாங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிபதி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார். நூலினை பேராசிரியர் செல்வராசு, ஆயுள் காப்பீட்டு கழக முகவர் லட்சுமி நரசிம்மன், பேராசிரியர் வேணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.பேராசிரியர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் கண்ணம்மாள், பேராசிரியர் பொற்கலை ஆகியோர் நூல் அறிமுக உரையாற்றினர். பேராசிரியர் ஜானகிராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, கடலூரைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.