உள்ளூர் செய்திகள்

ஓபன் செஸ் போட்டி

மதுரை: மதுரை செந்தாமரை கல்லுாரியில் சாணக்யா செஸ் பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான 8வது ஓபன் மற்றும் சிறுவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது. தாளாளர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். பயிற்சி மையத்தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார்.15 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் தேனி மாவட்டத்தின் சாத்வீகா முதலிடம், மிருதுளா 2ம் இடம், திண்டுக்கல் மிருதுனிகா 3ம் இடம், ஆடவர் பிரிவில் தேனி திருகார்த்திக் ஆனந்த் முதலிடம், கடலுார் கிருத்திக் விஷ்ணு 2ம் இடம், மதுரை கோகுல் 3ம் இடம் பெற்றனர்.12 வயது மகளிர் பிரிவில் தேனி ஹனி ஷக் ஷிதா முதலிடம், மதுரை ஜெயஸ்ரீ 2ம் இடம், யாகஸ்ரீ 3ம் இடம், ஆடவர் பிரிவில் தேனி தனுஜ் முதலிடம், ராமநாதபுரம் அதீப் 2ம் இடம், மதுரை நிரஞ்சன் ராம்குமார் 3ம் இடம் பெற்றனர். 9 வயது மகளிர் பிரிவில் சிவகங்கை கயல்விழி முதலிடம், திண்டுக்கல் ஸ்வஸ்திகா ஸ்ரீ 2ம் இடம், சிவகங்கை ரோஹிதா 3ம் இடம், ஆடவர் பிரிவில் மதுரை விஜய் முதலிடம், தேனி சிந்து ஜாஸ்வின் 2ம் இடம், மதுரை மகிழன் 3ம் இடம் பெற்றனர். ஓபன் பிரிவில் விருதுநகர் சஞ்சய் கணேஷ் பாண்டி முதலிடம், மதுரை பரத் ராஜ் 2ம் இடம், மதுரை சண்முகசுந்தரம் 3ம் இடம் பெற்றனர்.முதல்வர் செந்துார் பாண்டி பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குநர்கள் கவிக்குமார், ஜெயத்தங்கம் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்