உள்ளூர் செய்திகள்

அரிஸ்டோ பள்ளியில் ஆண்டுவிழா

கடலூர்: கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மற்றும் அரிஸ்டோ ஸ்டார் ஷைன் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு மகப்பேறு டாக்டர் சீதாலட்சுமி தலைமை தாங்கி, யூ.கே.ஜி., மழலையர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார்.மழலையர்கள் ஆடல், பாடல் மற்றும் நகைச்சுவை நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.விழாவில் பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்தூரி, பள்ளி தலைவர் சிவகுமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, மக்கள் தொடர்பு அதிகாரிகள் சிவராஜ், பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, துணைமுதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்