ஆக்கப்பூர்வமான விடுமுறைக்கான வழிகள்
புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், ஆளுமையை மேம்படுத்திக்கொள்ளவும் மாணவர்களுக்கு கிடைத்துள்ள ஒரு அருமையான வாய்ப்பு, இந்த கோடைகால விடுமுறை!புதிய மொழிகளைக் கற்கலாம்வெளிநாட்டு மொழிகளையோ அல்லது நம் நாட்டு மொழிகளான ஹிந்தி, தெலுங்கு போன்ற புதிய மொழிகளையோ கற்க இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். இது உங்கள் மூளைச் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் பெரிதும் உதவும்.ஆக்கப்பூர்வமான கலைகள்வெறுமனே செல்போன் பார்ப்பதற்குப் பதிலாக, உங்கள் கைவினைத் திறனை மேம்படுத்தலாம். ஓவியம் மற்றும் 'டிஜிட்டல் ஆர்ட்'களை உருவாக்கலாம். அடோப் இல்லஸ்ட்ரேட்டர் அல்லது போட்டோஷாப் போன்ற மென்பொருள்களைக் கற்றும் டிஜிட்டல் ஓவியங்களை உருவாக்கலாம். கதக், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடனங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த இசைக் கருவிகளைக் கற்கவும் இது சரியான காலம்.வாசிப்புப் பழக்கம் வாசிப்பு மனிதனை முழுமையாக்குகிறது. பாடப்புத்தகங்களைத் தாண்டி, சுய முன்னேற்ற நூல்கள், வரலாற்றுப் புத்தகங்கள் அல்லது கதைகளைப் படிக்கலாம். இது உங்கள் கற்பனைத் திறனை வளர்ப்பதுடன், மொழி அறிவையும் மேம்படுத்தும்.ஆன்லைன் படிப்புகள் இணையத்தில் பல இலவசப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. கிராபிக் டிசைனிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது பொது அறிவு தொடர்பான குறுகிய காலப் படிப்புகளை முடித்து சான்றிதழ் பெறலாம். இது உங்கள் 'ரெஸ்யூம்' வலிமை பெற உதவும்.உடல் ஆரோக்கியம்நாள் முழுவதும் தூங்குவதைத் தவிர்த்து, காலையில் யோகா, நடைப்பயிற்சி அல்லது நீச்சல், டென்னிஸ் உட்பட ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடலாம். இது உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.தன்னார்வ பணிகள்சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம். மரம் நடுதல், அருகில் உள்ள நூலகங்களுக்கு உதவுதல் அல்லது பிறருக்குத் தெரிந்த விஷயங்களைக் கற்றுக்கொடுத்தல் போன்ற செயல்கள் உங்களுக்கு மனநிறைவைத் தரும்.பயணங்கள் மற்றும் திட்டமிடல்புதிய இடங்களுக்குச் செல்வது உலக அறிவைத் தரும். அதே போல், அடுத்த கல்வி ஆண்டிற்கான இலக்குகளை இப்போதே திட்டமிடலாம். இந்தக் கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயலுங்கள். மேலும், இந்த விடுமுறையில் நீங்கள் செய்த புதிய காரியங்களை ஒரு புகைப்படமாகவோ அல்லது குறிப்பாவோ சேமித்து வையுங்கள். விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் போது, இது ஒரு சிறந்த 'சம்மர் மெமரி' ஆக இருக்கும்.பொழுதுபோக்கும், கற்றலும் சரிவிகிதத்தில் இருந்தால் இந்த விடுமுறை உங்கள் வாழ்வின் மறக்க முடியாத ஒன்றாக அமையும்!