உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு ஆண்டு விழா கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமையில் நடந்தது.தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். துணைத் தலைவர்கள் ஜெயராம், சம்பத், துணைச் செயலாளர்கள் சுரேந்திரன், ரங்கராஜ், பொருளாளர் ஆழ்வார்சாமி பங்கேற்றனர். வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை மற்றும் வணிகவியல் தகவல் தொழில்நுட்ப தலைவர் நாகசுவாதி வரவேற்றார்.சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் மதுரை கிளாரிஸ்கோ சொல்யூஷன்ஸ் நிறுவன இயக்குனர் விஷ்ணு பிரசாத், டி.டி.என்., கல்வி குழும தாளாளர் ஹெலன் லாரன்ஸ், தலைவர் லாரன்ஸ் பேசினர்.சிறந்த மாணவராக சமூக பணித்துறை குணாளன் தேர்வு செய்யப்பட்டு மன்னர் விருதும், சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு துறை நாகஜோதிக்கு ராணி மங்கம்மாள் விருதும் வழங்கப்பட்டது.அதிக மதிப்பெண் பெற்ற, பல்வேறு துறைகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளைகள் சார்பில் விருது வழங்கப்பட்டது. விடுப்பு எடுக்காத பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். உதவி பேராசிரியர் ராஜாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்