புதிய பாடநுால் பயிற்சி
மதுரை: மதுரை தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் பயிற்சி நடந்தது.முதல்வர் ஆனந்தி தலைமை வகித்தார். குழந்தைகள் எளிதாக கற்கும் வகையிலான புதிய அணுகுமுறைகள் விளக்கப்பட்டன. 5 பாடங்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் என 300 பேர் பயிற்சி பெற்றனர்.அடுத்த கட்டமாக, வட்டார அளவில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை பயிற்சி நிறுவனத்தினர் செய்திருந்தனர்.