உள்ளூர் செய்திகள்

கணிதவியல் புத்தாக்க பயிற்சி

சின்னாளபட்டி: திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் மானியக்குழு திட்ட மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டம் சார்பில் கணிதவியல் புத்தாக்க பயிற்சி நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி வகித்தார்.பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். புல தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பயிற்சி நுட்பங்கள் குறித்து விளக்கினார். கர்நாடகா, சத்தீஸ்கர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 36 கணிதவியல் துறை பேராசிரியர்கள், வல்லுநர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்